உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான Apple மே 7 / 2024 அன்று தங்கள் புதிய தயாரிப்பான iPad Pro thin ப்ரோமோஷன் வீடியோவை தங்களது YouTube பக்கத்தில் வெளியிட்டது அதில் கிளாசிக் பாடல் ஒலிப்பதோடு  ஒரு தொழில் பட்டறையில் நடுவில்  இசைக்கருவிகள் மற்றும் சில மின்சாதன பொருட்கள்  நசுக்கப்படுவது போல்  காண்பிக்கப்படுகிறது அதன் இறுதியில் ஒரே ஒரு பொருள் மட்டும்  நசுக்கப்படாதது போல் காமிக்க படுகிறது, அது அவர்களின் iPad pro என்று வருகின்றது, எனவே இதன் மூலம் அவர்கள் தயாரிப்பு அவ்வளவு மெல்லியதானது என சுட்டிக்காட்ட முயற்சித்துள்ளது. ஆனால்  உபகரண பொருட்கள் நசுக்கப்படுவதால் இது பலர் மத்தியில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தி உள்ளது,  இதனால் ஆப்பிள் நிறுவனம் மன்னிப்பு கோரியது.

இதற்கிடையில் மே 16 2024 அன்று அதன் போட்டி நிறுவனமான Samsung , மேலே கூறிய Crush! iPad Pro Apple என்ற விளம்பரத்தை விமர்சனம் செய்யும் விதமாக அவர்கள் அதே பாணியில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர் அதில் சில நசுக்கப்பட்ட பொருட்கள் நடுவில் உடைந்த இசை கருவியை ஒரு பெண் வாசிப்பதோடு தங்கள் தயாரிப்பை Galaxy Tab S9 Series வெளியிட்டுள்ளனர். மேலும் படைப்பாற்றலை ஒருபோதும் நசுக்க முடியாது என்று சுட்டிக்காட்டி உள்ளது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.