What is digital marketing in Tamil 

டிஜிட்டல் மார்க்கெட்டிங் என்றால் என்ன ?

தற்போதைய நவீன வர்த்தக உலகில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பெரும் பங்கு வகிக்கிறது, எனவே காலத்திற்கு ஏற்ப நமது தயாரிப்புகளையும் டிஜிட்டல் மூலம் எடுத்துச் செல்வதே சிறந்தது.

டிஜிட்டல் மார்க்கெட்டிங் என்பது நமது தயாரிப்பயோ அல்லது சேவையோ இணையம் , சமூக வலைதளம், மற்றும் செயற்கை நுண்ணறிவி ஆகியவற்றை பயன்படுத்தி நமக்கான இலக்கு வாடிக்கையாளரிடம் கொண்டு போய்ச் சேர்ப்பதே டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஆகும். ( மேலும் இதில் கீழே வருவனவும் அடங்கும் ) .

தேடுபொறி மார்க்கெட்டிங் : ( SEO MAEKETING )

What is search engine marketing in tamil

 

SEO என்பது தனக்குத் தேவையான தகவலையோ அல்லது பொருட்களையோ இணைய வழியாக எளிதாக தேடுவதற்கான ஒரு மென்பொருள் கருவி என கூறலாம்

 தேடுபொறி மார்க்கெட்டிங் என்பது பணம் செலுத்தி விளம்பரபடுத்துவது (SEM) அல்லது ஆர்கானிக் தேடல் முடிவுகள் (SEO) மூலம் தேடுபொறி (search engine) முடிவுகளில் உங்கள் வலைதள உள்ளடக்கத்தை தேடுபொறிகளின் முதல் பக்கத்திற்கு கொண்டு வர முயற்சிப்பது ஆகும். எ.கா : Google , Bing.

சமூக ஊடகங்களில் சந்தைப்படுத்துதல் : ( Social media marketing )

What is social media marketing in tamil

சமூக ஊடக சந்தைப்படுத்தல் என்பது ஒரு தயாரிப்பு அல்லது சேவையை விளம்பரப்படுத்த சமூக ஊடக ( social media) தளங்களைப் பயன்படுத்துவதாகும். உதாரணமாக சமூக வலைதளங்களில் தயாரிப்பு அல்லது உங்கள் சேவை பற்றி பதிவிடுவது . ( எ.கா) Facebook, Instagram, Linkedin, X, YouTube etc,.

உங்கள் பார்வையாளர்களுடன் ஈடுபட, பிராண்ட் விழிப்புணர்வை உருவாக்க, இணையதளப் போக்குவரத்தை அதிகரிக்க, இறுதியில் விற்பனையை அதிகரிக்க அல்லது பிற மார்க்கெட்டிங் நோக்கங்களை அடைய சமூக ஊடக நெட்வொர்க்குகளில் உள்ளடக்கத்தை உருவாக்குவதும் பகிர்வதும் இதில் அடங்கும். கவர்ச்சிகரமான உள்ளடக்கத்தை உருவாக்குதல், பின்தொடர்பவர்களுடன் ஈடுபடுதல், விளம்பரங்களை இயக்குதல் மற்றும் செயல்திறனைக் கண்காணிப்பதற்கும் பிரச்சாரங்களை மேம்படுத்துவதற்கும் அளவீடுகளை பகுப்பாய்வு செய்தல் போன்ற பல்வேறு உத்திகளை உள்ளடக்கியது.

உள்ளடக்க சந்தைப்படுத்தல் : ( Content marketing )

What is content marketing in tamil

உங்கள் தயாரிப்பு அல்லது சேவையயோ தரமான செய்தி அல்லது தகவல்களை சிறந்த முறையில் சுருக்கமாக உங்கள் இலக்கு வாடிகையாளர்களுக்கு கொண்டு போய் சேர்ப்பது .

உள்ளடக்க சந்தைப்படுத்தல் (வலைப்பதிவுகள், வீடியோக்கள், பாட்காஸ்ட்கள்): இலக்கு பார்வையாளர்களை ஈர்க்கவும் தக்கவைக்கவும் மதிப்புமிக்க உள்ளடக்கத்தை உருவாக்குதல் மற்றும் விநியோகித்தல். உள்ளடக்க சந்தைப்படுத்தல் பிராண்ட் அதிகாரத்தை உருவாக்குவதையும் வாடிக்கையாளர் விசுவாசத்தை வளர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

மின்னஞ்சல் சந்தைப்படுத்தல் : ( E mail marketing )

what is email marketing in tamil

மின்னஞ்சல் சந்தைப்படுத்துதல் என்பது குறிப்பிட்ட புதுப் பயனாளர்களுக்கு அல்லது தங்களிடம் ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களுக்கு தனது தயாரிப்பு அல்லது சேவை பற்றிய தகவல்களை மின்னஞ்சல் வாயிலாக மொத்தமாக அனுப்புவது என கூறலாம்.

மின்னஞ்சல் சந்தைப்படுத்தல்: இலக்கு செய்திகள் மற்றும் விளம்பர உள்ளடக்கத்தை நேரடியாக சந்தாதாரரின் இன்பாக்ஸிற்கு அனுப்புதல். இது வாடிக்கையாளர் தொடர்பு, முன்னணி வளர்ப்பு மற்றும் தயாரிப்புகள் அல்லது சேவைகளை மேம்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படுகிறது.

இணைந்த சந்தைப்படுத்தல் : ( Affiliate Marketing )

affiliate marketing in tamil

மூன்றாம் தரப்பினருடைய தயாரிப்பு அல்லது சேவையை நமது இணையதளம் அல்லது சோசியல் மீடியாக்களை பயன்படுத்தி விற்பனையாவது மூலம் ஒரு கமிஷன் கிடைக்கும் இதை இணைந்த சந்தைப்படுத்துதல் என கூறலாம்

 

Pay-Per-Click (PPC) விளம்பரம்          

ppc marketing in tamil

ஒரு விளம்பரதாரர்கள் தங்கள் தயாரிப்பை தேடுபொறி ( Google Ads) வழியாக கட்டணம் செலுத்தி விளம்பரம் செய்யும் போது தங்கள் இலக்கு வாடிக்கையாளர்கள் அந்த விளம்பரதாரரின் விளம்பரத்தை ஒவ்வொரு முறையும் கிளிக் செய்ய எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும் அல்லது செலுத்தியது என்பதை குறிப்பதாகும் . இந்த நடைமுறை சமூக வலைதளங்களிலும் ( facebook MetaAds , LinkedIn lead generation, & X, et,. ) பொதுவானது.

இன்ஃப்ளூயன்சர் மார்க்கெட்டிங்  (influencer marketing )

influencer marketing in tamil

சமூக ஊடகங்களில் பிரபலமாக உள்ளவர்கள் அல்லது அதிக பின்தொடர்புகளை ( Followers ) வைத்திருப்பவர்கள் , குறிப்பிட்ட விற்பனையாளர்களின் தயாரிப்பு அல்லது சேவைகளை தனது பக்கங்களில் பதிவிட்டுவது, மூலம் தன்னைப் பின்தொடர்புகளுக்கு கொண்டு போய் சேர்ப்பது இன்ஃப்ளூயன்சர் மார்க்கெட்டிங் (Influencer marketing) என கூறலாம்.

மொபைல் மார்க்கெட்டிங் ( mobile marketing)

மொபைல் மார்க்கெட்டிங் என்பது மொபைலில் பயனாளர்கள் பயன்படுத்தப்படும் மொபைல் ஆப்ஸ் ( Application) மற்றும் எஸ் எம் எஸ் ( SMS) வாயிலாக விளம்பரதாரர்கள் தங்கள் தயாரிப்பை விளம்பரம் செய்யும் முயற்சிப்பது மொபைல் மார்க்கெட்டிங் என கூறலாம்.

வீடியோ மார்க்கெட்டிங் ( Video marketing )

Video marketing in tamil

 தயாரிப்புகள், சேவைகள் அல்லது பிராண்டுகளை விளம்பரப்படுத்த வீடியோக்களை உருவாக்குதல் மற்றும் பகிர்தல். மற்றும் தற்போதைய பிரபலமான ( Trending ) உள்ளடக்கங்களை கண்டறிந்து அதற்கு ஏற்ப வீடியோக்களை தயாரித்து இலக்கு வாடிக்கையாளர்களுக்கு சென்றடைய செய்ய முயற்சிப்பது வீடியோ மார்க்கெட்டிங் ( Video marketing ) என கூறலாம். (YouTube, Vimeo):

பகுப்பாய்வு மற்றும் தரவுக் கருவிகள்:

google analytics tamil

Google Analytics போன்ற கருவிகள் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பிரச்சாரங்களின் செயல்திறனைக் கண்காணிக்கவும் பகுப்பாய்வு செய்யவும் உதவுகின்றன, பயனர் நடத்தை மற்றும் பிரச்சாரத்தின் செயல்திறனைப் ( Reach & Impression) பற்றிய நுண்ணறிவுகளை வழங்குகின்றன.

வணிகத்தின் இலக்குகள் மற்றும் இலக்கு பார்வையாளர்களுக்கு ஏற்றவாறு விரிவான டிஜிட்டல் மார்க்கெட்டிங் உத்திகளை உருவாக்க இந்த தளங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து செயல்படுகின்றன !

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.