மும்பையில் உள்ள காட்கோபர் என்ற இடத்தில் பலத்த காற்றுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் புழுதிப் புயலால் விளம்பர பலகை சரிந்து விழுந்ததில் 14 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 70 பேர் காயம் அடைந்தனர். இத்தகைய சம்பவம் அனைவருக்கும் வருத்தம் அளிப்பதாக உள்ளது.

mumbai banner collapse /

தற்போது வளர்ந்து வரும் நவீன வியாபார உலகில் விளம்பரப்படுத்துதல் பலவகையில் பரிணாம வளர்ச்சி அடைந்து வந்தாலும், வியாபார போட்டி காரணமாக காலம் காலமாக பெரிய நகர்புறங்களில் பெரிய பேனர்கள் மூலம் தங்கள் தயாரிப்பை  விளம்பரப்படுத்த  தயங்குவதில்லை , இயற்கை பேரிடர் லால் இது போன்ற சம்பவம் நடப்பது இயல்பாக இருப்பினும் இதை எவ்வாறு சரியான முறையில் பராமரிக்கலாம் என்பதை சிலவற்றை கீழே காண்போம்:

  • விளம்பரம் அமைக்கப் போகும் சுற்றுப்புற சூழலுக்கு ஏற்றவாறு விளம்பர பலகையை தேர்வு செய்யலாம்.
  • விளம்பரத்தின் உள்ளடக்கம் பெரியதாக இருந்தால் போதுமே, தவிர விளம்பர பலகையில் அல்ல.
  • இரும்பு பலகைகளை தவிர்த்து விட்டு குறுகிய காலத்திற்கு ஏற்ப விளம்பர பலகையை தேர்வு செய்யலாம்.
  • ஒரு மாதம் அல்லது இரண்டு மாதத்திற்கு ஒரு முறை விளம்பரப்படுத்துவோர் மற்றும் விளம்பரத்திற்கு உட்பட்ட நிலத்தின் உரிமையாளர் விளம்பர பலகையின் நிலை அறிந்து அதற்கு ஏற்ப செயல்படலாம்.
  • நீண்ட காலத்திற்கு இல்லாமல் குறுகிய காலத்திற்கு விளம்பரத்தை தேர்வு செய்து விளம்பர பலகையை அமைக்கலாம் இதனால் தேய்மானம் குறைவாக இருக்கும் எதிர்பாராத விபத்துகளை தவிர்க்கலாம்.
  • வானிலை அறிக்கைகளை தெரிந்து இதுபோல புயல் அல்லது மழைக் காலங்களில் முன்னதாகவே விளம்பரப் பலகையின் நிலையை ஆய்வு செய்து கொள்ளலாம்.

இவ்வாறு பல வகையில் முன்னெச்சரிக்கையாக இருந்தால் பின்வரும் காலங்களில் இது போன்ற சம்பவம் நடக்காமல் தடுக்கலாம்!

 

 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.